மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் ஜீவசமாதி அடைய உள்ள 22 வது சித்தர் - காளீஸ்வரி சித்தர்.
மேல்மருவத்தூரில் ஜீவசமாதியடையும் 22 வது சித்தர்
- காளீஸ்வரி சித்தர்
மேல்மருவத்தூர்
ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம். சித்தர்களின் தாயான அவளை வணங்கி, வாழ்ந்து, ஜீவசமாதியடைந்த 21 சித்தர்களின் சக்தியே அன்னை ஆதிபராசக்தியாக
அங்கு தோன்றியது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்
அன்னைக்கு அமைந்த முதல் கோவில் அது.
காளீஸ்வரி
சித்தர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஜீவ சமாதியடையும் 22 வது
சித்தர் ஆவார். தற்போது அன்னையின் வாக்கின்படி, இவர் நீண்ட கால மெளனம் மேற்கொண்டுள்ளார்.
1999 ல் ஆதிபராசக்தி அருள்வாக்கில் ஆட்கொளல்
அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு பங்காரு அம்மாவின் வாக்காக வெளிப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் 1999 ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் பணியிலிருந்த இவரை அன்னை ஆதிபராசக்தி தனது அருள்வாக்கில் ஆட்கொண்டாள். அதைத் தொடர்ந்து இவரை திருவண்ணாமலை மலைக்குகையில் 8 மாதங்கள் தங்க வைத்து துறவியாக்கினாள்.
மருவத்தூரில்
சிவாலயம் தோன்றிய வரலாறு
சக்தி
ஸ்தலம் தோன்றும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு சிவஸ்தலம் தோன்றும் என்னும் ஐதீகத்தின்படி, அன்னை ஆதிபராசக்தி ஆலயம் அமைந்த இடத்தின் கிழக்கில், 300 மீட்டர் தொலைவில் 2002 ம் ஆண்டில் அன்னை ஆதிபராசக்தி ஆதிசிவனுடன் சமேதகர்களாய் இந்த ஆலயத்தில் தோன்றியருளினார்கள்.
இந்த
ஆலயத்தை உருவாக்கிய காளீஸ்வரி சித்தர் இந்த ஆலய காளி கோவிலில் வாழ்ந்து, தனது மாத பென்ஷனில் ஆலயத்தை பராமரிக்கின்றார். இந்த ஆலயத்தில்
உண்டியல் இல்லை.
துறவியாக
இந்த ஆலயத்தில் வாழும் சித்தர், இந்த 20 வருட சன்யாச வாழ்வில் யார் வீட்டிற்கும் சென்றது கிடையாது. யாரிடமிருந்தும் எதுவும் தனக்கென்றோ, ஆலயத்திற்கென்றோ
பெற்றுக் கொண்டது கிடையாது.
“பறவைகளும் துறவிகளும் தனக்கென்று எதையுமே சேர்ப்பதில்லை” என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்கிறார்.
“கடவுள் காசு கேட்பதில்லை” என்று போதிக்கின்றார்.
இவரது
கையால் பூஜித்த விபூதி பெற்றுச் சென்ற பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. நூற்றுக்கணக்கானோர் பயன் பெற்றனர். இது இலவச சேவை..
தற்போது
அன்னையின் வாக்கின்படி, இவர் நீண்ட கால மெளனம் மேற்கொண்டுள்ளார்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், இவரை தொந்தரவு செய்யக்
கூடாது.
ஆலயத்தில்
அமைதியாக தெய்வத்தை வேண்டிச் செல்லவேண்டும்.. அவரது மெளன தவத்தின்
பயனாக இவ்வாலயத்தில் தெய்வ சக்தி பெருகி, பக்தர்கள் வேண்டுதல்கள்
நிறைவேறும்.
ஆலயத்தில்
அமைதி காக்கவும்.
ஒம்
சக்தி.
ஓம் நமச்சிவாய. ஓம் காளி.
காளீஸ்வரி சித்தர் பீடம்
https://www.kaliswarisiddharpeedam.com
https://www.kaliswarisiddharpeedam.org
Youtube Channel - https://youtube.com/@KaliswariSiddharPeedam

Comments
Post a Comment