Posts

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் ஜீவசமாதி அடைய உள்ள 22 வது சித்தர் - காளீஸ்வரி சித்தர்.

Image
  மேல் மருவத்தூரில் ஜீவசமாதியடையும் 22 வது சித்தர் - காளீஸ்வரி சித்தர் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் . சித்தர்களின் தாயான அவளை வணங்கி , வாழ்ந்து , ஜீவசமாதியடைந்த 21 சித்தர்களின் சக்தியே அன்னை ஆதிபராசக்தியாக அங்கு தோன்றியது . லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னைக்கு அமைந்த முதல் கோவில் அது . காளீஸ்வரி சித்தர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஜீவ சமாதியடையும் 22 வது சித்தர் ஆவார் . தற்போது அன்னையின் வாக்கின்படி , இவர் நீண்ட கால மெளனம் மேற்கொண்டுள்ளார் . 1999 ல் ஆதிபராசக்தி அருள்வாக்கில் ஆட்கொளல் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு பங்காரு அம்மாவின் வாக்காக வெளிப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் 1999 ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் பணியிலிருந்த இவரை அன்னை ஆதிபராசக்தி தனது அருள்வாக்கில் ஆட்கொண்டாள் . அதைத் தொடர்ந்து இவரை திருவண்ணாமலை மலைக்குகையில் 8 மாதங்கள் தங்க வைத்து துறவியாக்கினாள் . மருவத்தூரில் சிவாலயம் தோன்றிய வரலாறு சக்தி ஸ்தலம் தோன்றும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு சிவஸ்தலம் தோன்றும் என்னும் ஐதீகத்தின்படி , அன்னை ஆதிபரா...